Udhayanidhi Stalin: 'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால் நிறைய வேண்டாம்' திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Udhayanidhi Stalin: 'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால் நிறைய வேண்டாம்' திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!

Udhayanidhi Stalin: 'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால் நிறைய வேண்டாம்' திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!

Published Mar 12, 2025 07:10 PM IST Karthikeyan S
Published Mar 12, 2025 07:10 PM IST

  • சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 72 இணையர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திருமணமானவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், நிறைய பெற்றுக்கொள்ளாதீர்கள். அதையும் மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறைந்துவிடும். ஆனால், குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாத மாநிலங்கள் இதனால் நன்மை அடையப்போகின்றன. வட மாநிலங்கள் 100 தொகுதிகள் வரை பெறப்போகின்றன. எனவே தான் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்." என்று பேசினார்.

More