தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Delhi Minister Massage Video In Tihar Goes Viral; Bjp Lashes Kejriwal, Aap Hits Back

minister massage video:திஹார் சிறையை மசாஜ் சென்டராக மாற்றிய தில்லி அமைச்சர்

Nov 19, 2022 05:22 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 19, 2022 05:22 PM IST

பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்திர ஜெயில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது சிறை அறையில் அமைச்சரின் கால், தலை, உடல் பகுதிகளுக்கு ஒரு நபர் மசாஜ் செய்யும் விடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விடியோ கடந்த செப்டம்பர் மாதம் எடுத்ததாக தெரிகிறது. அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகை குறித்த பாஜகவினர் கேள்வி எழுப்பிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். நீதிமன்ற காவலில் சிறை சென்றிருந்த அமைச்சருக்கு காலில் அடிப்பட்ட நிலையில், அதற்கான பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. பாஜவினர் இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு தெரிவிப்பது அருவருக்கத்தக்கதாக உள்ளதாக தில்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்தார். முன்னதாக, அமைச்சரும், அவருக்கு மசாஜ் பார்த்துக்கொண்டிருந்த நபரும் டிவி பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது. தொலைக்காட்சியை பார்த்தவேறே நீள நிற டி-ஷர்ட் அணிந்த நபர் அமைச்சருக்கு மசாஜ் செய்கிறார். அந்த விடியோவின் மற்றொரு காட்சியில் அமைச்சர் அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் நான்கு பேர் நின்றவாறு அமைச்சரிடம் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விடியோவின் உண்மைத்தன்மையை நமது நிறுவனத்தால் கண்டறிய இயலவில்லை. இந்த விடியோ வெளியாகி வைரலான பின்னர் சிறை கண்காணிப்பாளார், சிறை விதிகளை மீறி சிறப்பு சலுகை வழங்கியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விடியோ வெளியான சில மணி நேரங்களில் தில்லி முதல் கெஜ்ரிவாலை மோசடிகளின் மன்னன் என பாஜகவினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் கெளரவ் பாட்யா என்பவர், "சிறையில் விவிஐப்பிக்கள் நடத்தப்படும் கலாச்சாரம் இப்படிதான் உள்ளது. சிறை விதிமுறைகள் முழுவதுமாக மீறப்பட்டுள்ளது. இவர்கள் சிறைக்கு உள்ள புதிய விதிமுறைகளை உருவாக்குகிறார்கள். கெஜ்ரிவால் சிறை விதிகளை படித்து பார்க்க வேண்டும். சிறை கைதிக்கு கிடைக்ககூடாத அனைத்து சலுகைகளும் அவருக்கு கிடைத்துள்ளது" என்றார். இதைத்தொடர் தொடர்ந்து அமைச்சருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான அறிக்கை ஆம் ஆத்மி டுவிட்டரில் வெளியிட்டது. கடந்த மே மாதம் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பண மோசடி வழக்கில் அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

More