Jayakumar: 'ஒரு நாள் கூத்து அது'.. முதல்வர் மு.க.ஸ்டாலினை விளாசும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jayakumar: 'ஒரு நாள் கூத்து அது'.. முதல்வர் மு.க.ஸ்டாலினை விளாசும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Jayakumar: 'ஒரு நாள் கூத்து அது'.. முதல்வர் மு.க.ஸ்டாலினை விளாசும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published Jul 23, 2024 07:34 PM IST Karthikeyan S
Published Jul 23, 2024 07:34 PM IST

  • அதிமுக சார்பில் தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விற்பனையை நிறுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும் பழைய வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறுகையில், "கடந்த 3 ஆண்டுகளில் அம்மா உணவகம் பற்றி நினைக்காத முதல்வர், திடீரென்று விழித்துக் கொண்டு அம்மா உணவகத்தில் ஆய்வு செய்துள்ளார். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருவதால் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா குடிநீர், விலையில்லா மடிக்கணினி, அம்மா சிமெண்ட் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது." என அவர் கூறினார்.

More