Chine Fire Accident: சீன அரசின் தொலைத்தொடர்பு நிறுவன கட்டடத்தில் தீ விபத்து
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சாங்ஷா என்ற நகரில் உள்ள வானுயர கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கருப்புகையுடன் தீ கட்டடத்தை சூழ்ந்தவாறு பற்றி எரியும் விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 42 மாடிகள் கொண்ட அந்த கட்டடம் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாம்க்கு சொந்தமானது என சீனா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுபோன்று தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணமாக முறையான அங்கீகாரம் பெறாமல் கட்டடங்கள் கட்டப்படுவதால் இந்த விபத்துகள் நிகழ்வதாக கூறப்படுகிறது. இதுபோன்ற தருணங்கள் விபத்து ஏற்படும் கட்டடங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதென்பது கொஞ்சம் கடினமான விஷயமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.