Chhattisgarh Encounter: பாதுகாப்பு படை - நக்சல் இடையே துப்பாக்கி சூடு! நகசல் தலைவன் உள்பட 16 பேர் சுட்டுக்கொலை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Chhattisgarh Encounter: பாதுகாப்பு படை - நக்சல் இடையே துப்பாக்கி சூடு! நகசல் தலைவன் உள்பட 16 பேர் சுட்டுக்கொலை

Chhattisgarh Encounter: பாதுகாப்பு படை - நக்சல் இடையே துப்பாக்கி சூடு! நகசல் தலைவன் உள்பட 16 பேர் சுட்டுக்கொலை

Published Jan 22, 2025 08:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jan 22, 2025 08:00 PM IST

  • சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் பகுதியில் பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 16 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையை சேர்ந்த E-30 கரியாபந்த், கோப்ரா 207, சிஆர்பிஎஃப் 65, 211 பட்டாலியன் மற்றும் சிறப்பு நடவடிக்கை குழு ஆகியவை இணைந்து நடத்திய துப்பாக்கிய சூட்டில் நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில், ஒடிசா மாநில நக்சல் குழுவை சேர்ந்த முக்கிய தலைவர் சலபதி கொல்லப்பட்டார். அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீதான அலிபிரி தாக்குதலுக்கு முக்கிய மூளையாக சலபதி செயல்பட்டதாக கூறப்படுகிறது. சலபதி சித்தூர் மாவட்டத்தில் உள்ள மத்யம்பை கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

More