Dindigul : பாரில் இருந்து பணத்தை எடுத்த மதுவிலக்கு போலீசார்? சிசிடிவி காட்சி வைரல்!
- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சியில் உள்ள பாரில் திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது பாரில் விற்பனை செய்து அட்டைப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணை மேற்கொண்டு பாரில் சோதனை என்ற பெயரில் பணத்தை எடுத்துச்சென்ற திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், காவலர்கள் ஜேம்ஸ், மணிகண்டன், கல்யாண்குமார் ஆகிய 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.