Vanathi Srinivasan: இந்து சமய அறநிலையத்துறை எதற்கு?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vanathi Srinivasan: இந்து சமய அறநிலையத்துறை எதற்கு?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன்!

Vanathi Srinivasan: இந்து சமய அறநிலையத்துறை எதற்கு?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன்!

Published Apr 03, 2025 07:05 PM IST Karthikeyan S
Published Apr 03, 2025 07:05 PM IST

  • கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனவாசன் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இஸ்லாமிய மக்களுடைய சொத்துக்களை அவர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று சொன்னால் இந்து அறநிலையத்துறை என்ற ஒன்றை இந்த அரசு எதற்காக வைத்துக்கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு ஆளுக்கொரு பேச்சு என்று சொல்கின்ற போது பெரும்பான்மை சமுதாயத்திற்கு ஒரு நீதி, சிறுபான்மை சமுதாயத்திற்கு ஒரு நீதி என்று இன்று சட்டப்பேரவையில் அத்தனை பேரும் கருப்பு துணியை அணிந்துகொண்டு கோஷம் போடுமாறு மாநிலத்தினுடைய முதல்வர் சட்டப்பேரவைக்குள் கேட்கிறார் என்றால் அவர்கள் உண்மையாகவே இஸ்லாமிய மக்களுடைய சீர்திருத்தத்தை பற்றி கவலைப்படவில்லை என்று அர்த்தம்." என்றார்.

More