Tamil News  /  Video Gallery  /  Bihar Mason Badla Goes Viral; Casually Sets Mercedes On Fire Over Unpaid Dues

man sets mercedes fire:நிலுவை பாக்கி தராத கடுப்பில் சொகுசு காரை பற்ற வைத்த நபர்

15 September 2022, 13:31 IST Muthu Vinayagam Kosalairaman
15 September 2022, 13:31 IST

பிகாரை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு தர வேண்டி. நிலுவை பாக்கி தராமல் தாமதித்து வந்த நபரின் சொகுசு காரை தீபற்ற வைத்துவிட்டு சென்ற விடியோ காட்சி வைலராகியுள்ளது. தில்லியை அடுத்த நொய்டா பகுதியில் வசித்து வரும் ஆயுஷ் என்பவரின் வீட்டில் பிகாரை சேர்ந்த ரன்வீர் என்பவர் பைப்லைன் வேலைகள் செய்து கொடுத்துள்ளார். இந்த பணிகளுக்கான கட்டணமாக ரூ, 5 லட்சம் செலவாகியுள்ளது. இதில் ரூ. 3 லட்சம் 80 ஆயிரம் வரை ரன்வீரிடம், ஆயுஷ் செலுத்தியதாக தெரிகிறது. மீதமுள்ள ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுக்காமல் ஆயுஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் நிலுவை தொகையை அளிக்குமாறு ரன்வீர் பலமுறை அணுகியும் ஆயுஷ் அதை தராமல் தாமதித்துள்ளார். இதில் மிகவும் வருத்தமடைந்த ரன்வீர், ஆயுஷ்க்கு சொந்தமான மெர்க்டீஸ் பென்ஸ் சொகுசு காரை தீபற்ற வைத்து சென்றுள்ளார். தனது சொகுசு காரை சோஷரூம் அருகே இன்சூரன்ஸ் பெறுவதற்கு தொடர்பாக ஆயுஷ் நிறுத்தி வைத்திருப்பதை அறிந்த ரன்வீர், மிகவும் கேஷுவலாக தனது இருசக்கர வாகனத்தில் வந்து அந்த கார் மீது எளிதில் நெருப்பு பற்றி எறியும் திரவத்தை ஊற்றி தீபற்ற வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த மொத்த நிகழ்வும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில், ரன்வீரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது ஐபிசி பிரிவு 435இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரன்வீரின் குற்றச்சாட்டுக்கு ஆயுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் கலவையான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். தர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்தால் உங்கள் கார்கள் எரிக்கப்படும் எனவும், சட்டத்தை தன் கையில் எடுக்க கூடாது எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

More