தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Biden Stumbles On Flight Of Stairs In Bali; Here Is What Indonesian President Did

Biden stumbles on stairs: படியில் ஸ்லிப்! பைடனை காப்பாற்றிய இந்தோனிஷியா ஜனாதிபதி

Nov 16, 2022 02:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 16, 2022 02:50 PM IST

அரசியல் பயணமாக பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் அருகே யாரும் செல்லாமல் இருப்பதென்பது வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாகவே இருந்து வருகிறது. இது சமயங்களில் தலைவர்களும் சில அசெளகரியமான சூழ்நிலையிலும் சிக்கிக்கொள்ளும் நிகழ்வுகளும் ஏற்படுவதுடன். அதுபோன்றதொரு நிகழ்வு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ளது. G20 உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்றுள்ள பைடன், அங்கு பாலி நகரில் மாங்குரோவ் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இந்தோனேஷியா ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் பேசியவாறே படி ஏறிக்கொண்டிருந்த பைடன், கடைசி படி இருப்பதை கவனிக்கால் அடி எடுத்து வைத்து ஸ்லிப் ஆனார். உடனே அருகில் இருந்த ஜோகோ விடோடோ, அவரை தாங்கி பிடித்து பைடனை கீழே விழாமல் சட்டென தடுத்தார். பின்னர் அங்கிருந்த மாங்குரோவ் வனத்துக்கு சென்று G20 உச்சி மாநாடுக்கு வருகை புரிந்த அனைத்து நாட்டு தலைவர்களும் மரக்கன்றுகளை நட்டனர். கடந்த வாரம் மத்தியில் நியூயார்க நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட பைடன், இதேபோன்று ஸ்லிப் ஆகி கீழே விழபார்த்தார். அதுமட்டுமில்லாமல் கடந்த ஜூன், மே, மார்ச் மாதங்களில் விமானத்தினுள் செல்வதற்கு படிக்கட்டுகள் ஏறியபோதிலும் ஸ்லிப்பானார் பைடன். படி ஏறுவதில் தொடர்ச்சியாக அவர் ஸ்லிப் ஆகி வருவதை பலரும் கிண்டல் அடித்த சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More