Manipur: துப்பாக்கியால் சக வீரர்களை சுட்டு தற்கொலை செய்த ராணுவ வீரர்! 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
- இந்திய துணை ராணுவபடைகளின் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர் ஒருவர், சக வீரர்கள் 6 பேரை துப்பாக்கியால் சுட்டு பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மணிப்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கும் நிலையில், இந்த சம்பவத்தால் காயமடைந்த வீரர்கள் சுராசந்த்பூரிலுள்ள மிலிட்டரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட வீரர் குக்கி இனத்தை சேர்ந்தவர் என்பதும், காயமடைந்தவர்கள் மணிப்பூரை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மணிப்பூர் தற்போது நிகழ்ந்த வரும் இனப்பிரச்னைக்கும் இந்த துப்பாக்கி சூடு நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை எனவும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சக வீரர்களை சுட்ட பின், தன்னை தானே சுட்டுக்கொண்ட வீரர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சுராசந்த்பூர் நகரத்தை சேர்ந்தவர் என்பதும், விடுமுறை முடிந்து அவர் சமீபத்தில் தான் பணிக்கு திரும்பியிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது மணிப்பூரில் நிலவி வரும் வன்முறையால் தேவையற்ற வதந்திகளை தவிர்க்கும் விதமாக இந்த தகவல் பகிரப்பட்டிருப்பதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதத்தி மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறை வெடித்த நிலையில், தற்போது வரை பதட்டமான சூழல் நிலவி வருகிறது.