Tiruvannamalai: 14 கி.மீ. கிரிவல பாதையில் காட்சியளித்த அருணாசலேஸ்வரர்.. திருவண்ணாமலையில் திருவூடல் நிகழ்வு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tiruvannamalai: 14 கி.மீ. கிரிவல பாதையில் காட்சியளித்த அருணாசலேஸ்வரர்.. திருவண்ணாமலையில் திருவூடல் நிகழ்வு

Tiruvannamalai: 14 கி.மீ. கிரிவல பாதையில் காட்சியளித்த அருணாசலேஸ்வரர்.. திருவண்ணாமலையில் திருவூடல் நிகழ்வு

Jan 16, 2025 11:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 16, 2025 11:30 PM IST

  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் திருவிழா கோலகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரரை நினைத்து தவமிருந்த பிருங்கி மகரிஷி, ஸ்ரீபராசக்தி அம்மனை வழிபட மறுத்தார். இதனால் பிருங்கி மகரிஷிக்கு காட்சி தருவதாக சொல்லக்கூடாது என பராசத்தி அம்மன் சிவனை தடுத்துள்ளார். அதையும் மீறி அருணாசலேஸ்வரர் செயததால், இருவருக்கும் இடையே ஊடல் ஏற்பட்டது. இதை சமாதானம் செய்ய முயன்ற சுந்தரமூர்த்தி நாயனார் முயற்சியும் தோல்வியடைந்தது. சுவாமிக்கு, அம்மனுக்கு ஏற்பட்ட திருவூடல் மற்றும் மறுவூடலை பக்தர்களுக்கு விளக்கும் வகையிலான நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவூடல் நிகழ்வு கோலகலமாக நடைபெற்றது

More