Bank Robbery: சிசிடிவி ரிப்பேர்.. வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை - மங்களுருவில் துணிகரம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bank Robbery: சிசிடிவி ரிப்பேர்.. வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை - மங்களுருவில் துணிகரம்

Bank Robbery: சிசிடிவி ரிப்பேர்.. வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை - மங்களுருவில் துணிகரம்

Jan 18, 2025 06:20 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 18, 2025 06:20 PM IST

  • கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள கே.சி. சாலை சந்திப்பில் அமைந்திருக்கும் கோடேகர் வியாசய்யா சேவா சஹாகரி வங்கி கிளையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. முதலமைச்சர் சித்தராமையா மங்களூருக்கு வந்திருந்த நாளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த ஐந்து பேர் வங்கி கிளைக்குள் நுழைந்து, உள்ளே இருந்த ஐந்து ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். கடந்த இரு நாள்களுக்கு முன் தட்சிண கன்னட மாவட்டத்திலுள்ள பிதார் பகுதியில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும்போது துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை நடந்த சம்பவத்தைத், மற்றொரு சம்பவம் நடந்திருக்கும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

More