தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Annmalai Slams Dmk For Issuing Lesser Relief Fund To Fishermen

Annamalai: காசோலையை திருப்பி கொடுத்த மீனவர்! மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்படும் திமுக - அண்ணாமலை பகிர்வு

Mar 04, 2024 06:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 04, 2024 06:50 PM IST
  • மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதாக அறிவித்திருந்த ரூ. 5 லட்சத்துக்கு பதிலாக ரூ. 2 லட்சம் காசோலை மட்டுமே வழங்கியதற்கு பூம்புகாரை சேர்ந்த மீனவர் ரமேஷ், முதலமைச்சர் ஸ்டாலினிடம் விழா மேடையிலேயே புகார் அளித்தார். பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பி கொடுத்தார். இதுதொடர்பான விடியோவை பகிர்ந்திருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மீனவர் ரமேஷை தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
More