Tamil News  /  Video Gallery  /  Anand Mahindra Shares Tweet Quoting World Best Bolero Driver As He Escapes Elephant Chase - Viral Video

world bestBolero driver: துரத்திய ஒற்றை யானையிடம் சிக்காமல் தப்பித்த டிரைவர்!

14 September 2022, 22:54 IST Muthu Vinayagam Kosalairaman
14 September 2022, 22:54 IST

பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹேந்திரா நாட்டு நடப்புகள் பற்றி டுவிட்டரில் கருத்து பகிர்வதை குறிப்பிடும் ஏதேனும் வித்தியாசமான நிகழ்வுகளை கன்டால் அதை டுவிட்டரில் பதிவாக பகிர்வதையும், தனது கருத்தை தெரிவிப்பதையும் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார். சமீபத்தில் உலகின் சிறந்த போலீரோ கார் டிரைவர் எனக் குறிப்பிட்டு விடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில், போலீரோ காரின் சென்றவர்களை வழிமறித்த ஒற்றை யானை திடீரென் துரத்த, அந்த காரை ஓட்டிய டிரைவர் எந்த டென்ஷனும் இல்லாமல் யானை துரத்தும் வேகத்துக்கு ஈடுகொடுத்த தனது காரை ரிவர்ஸ் நோக்கி செயல்படுத்தினர். சுமார் 36 விநாடிகள் வரை யானை அவர்களை துரத்திக்கொண்ட இருந்தபோதிலும், எந்த பயத்தையும் வெளிக்காட்டாமல், பதட்டத்தில் காரை இயக்குவதில் எந்த சிக்கலும் இல்லாமல் ரிவர்ஸ் செய்தார். ஒரு கட்டத்தில் யானை தனது ஓட்டத்தை நிறுத்தி விலகி காட்டுக்குள் சென்றது. பரபரப்பு மிக்க இந்த சூழலில் எந்தவித பயமும் இன்றி மிகவும் கூலாக காரை இயக்கி தப்பித்த அந்த காரை டிரைவரை கேப்டன் கூல் என பாராட்டியுள்ளார் ஆனந்த் மஹேந்திரா. இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் டிரைவரின் சாதுரியத்தையும், சமயோஜித செயலையும் பாராட்டியதோடு, இதுபோன்ற தருணத்தில் மாட்டிக்கொண்டு தாங்கள் என்ன செய்வோம் என்பதையும் வேடிக்கையா தெரிவித்துள்ளனர்., இந்த விடியோவில் காணப்படும் சம்பவம் கர்நாடகா மாநிலம் கபினி வனவிலங்குகள் காப்பகத்தில் நிகழ்ந்துள்ளது.

More