தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Airplanes Collided At An Air Show In Dallas

video: அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்து

Nov 13, 2022 08:13 PM IST Karthikeyan S
Nov 13, 2022 08:13 PM IST

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் அந்நாட்டு விமான படையின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில் போயிங் பி-17 மற்றும் பெல் பி-63 கிங்கோப்ரா விமானங்கள் வானில் பறந்தன. விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு விமானங்களும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து 2 விமானங்களும் வெடித்து சிதறி தரையில் விழுந்து நொறுங்கியது. இருப்பினும் விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவாயிற்று என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் இந்த விபத்து குறித்து டுவிட்டரில் "வீடியோ பதிவுகள் இதயத்தை உடைக்கிறது. விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். பி-17, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க வான் சக்தியின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. கிங்கோப்ரா என்ற அமெரிக்க போர் விமானம், போரின் போது சோவியத் படைகளால் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More