Tamil News  /  Video Gallery  /  Agra: Monkeys 'Invade' Taj Mahal; Spanish Tourist Bitten, Hospitalised

Monkey attacks tourist: தாஜ்மஹால் வந்த சுற்றுலா பயணியை கடித்த குரங்கு

21 September 2022, 14:22 IST Muthu Vinayagam Kosalairaman
21 September 2022, 14:22 IST

உலக அதிசியங்களின் ஒன்றான தாஜ்மஹால் சுற்றி பார்க்க வந்த ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணியை குரங்கு ஒன்று கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாஜ்மஹாலில் உள்ள ராயல் கேட் பகுதியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பெண் சுற்றுலா பயணியன் முழங்காலில் குரங்கு ஒன்று கடித்துள்ளது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்தவர்கள் அந்த பயணி மீட்டு முதலுதவி அளித்த பிறகு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு கடிவாங்கிய பெண்மணியை அழைத்து சிகிச்சை அளித்தனர். சமீப காலமாக தாஜ்மஹாலை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் குறிவைத்து தாக்கி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. தாஜ் மஹாலை பார்த்து ரசிக்க இந்தியாவிலிருந்து மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் குரங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வெளிநாட்டு பயணியை குரங்கு கடித்த சம்பவத்தை சீரயஸான விஷயமாகவே உள்ளது. இந்த விவகாரம் அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடிக்கு மத்தியில், உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலா வருவாயும் பெரிய அளவில் பாதிக்ககூடும் என உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். குரங்குகள் முற்றுகை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை மற்றும் உள்ளூர் குடிமை அமைப்புகளுக்கு இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் குரங்குகளை விரட்டுவதற்கு தாஜ் மஹாலில் பணிபுரியும் பணியாளர்களிடமும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குரங்குகளை கட்டாயப்படுத்தி அங்கிருந்தி வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு இதற்கு ஆட்சோபனை தெரிவித்த நிலையில் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது.

More