Vishal: "உங்க குழந்தையை கரை சேர்க்க கடுமையாக வேலை செய்வேன்"! மிஷ்கினுக்கு நன்றி சொன்ன விஷால்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vishal: "உங்க குழந்தையை கரை சேர்க்க கடுமையாக வேலை செய்வேன்"! மிஷ்கினுக்கு நன்றி சொன்ன விஷால்

Vishal: "உங்க குழந்தையை கரை சேர்க்க கடுமையாக வேலை செய்வேன்"! மிஷ்கினுக்கு நன்றி சொன்ன விஷால்

Published Mar 17, 2024 08:47 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 17, 2024 08:47 PM IST

  • சினிமாவில் வந்து 25 ஆண்டுகள் கழித்து இயக்குநர் ஆகியிருப்பதை உணர்ச்சிபூர்வமாக பேசி தனது எக்ஸ் பக்கத்தில் விடியோவாக பகிர்ந்துள்ளார் நடிகர் விஷால். அதில், "ஹீரோவாக என்னுடைய பயணம் 25 வருடங்களுக்கு பிறகு இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. எனது கனவு, ஆசை, வாழக்கையில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்கிற என்னுடைய முதல் எண்ணம் எல்லாமே நிஜமாகி இருக்கிறது. ஆம்.., எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் தற்போது நான் முதன்முதலாக இயக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்காக லண்டன், அஜர்பைஜான் மற்றும் மால்டா ஆகிய இடங்களுக்கு கிளம்புகிறோம். விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் என் தந்தை ஜி.கே ரெட்டி மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார் சொன்னதுபோல கடுமையான உழைப்பு ஒருபோதும் வீண் ஆகாது. எது வந்தாலும் பரவயில்லை என உங்கள் கனவுகளை விடாமுயற்சியுடன் தொடரும்போது ஒருநாள் அது நிஜமாக மாறும். இந்த நேரத்தில் எனது தந்தைக்கு நன்றி கூறி கொள்கிறேன். அதே போல் எனது குரு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். டைரக்டராக உங்கள் பேரை காப்பாத்துவேன்" என்று பேசி இருக்கிறார். இறுதியாக இயக்குநர் மிஷ்கினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

More