திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த சீயான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த சீயான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன்

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த சீயான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன்

Updated Mar 30, 2025 07:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Mar 30, 2025 07:50 PM IST

  • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நத்தமாடிபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் சீயான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் கண்டுகளித்தனர். பார்வையாளர்களோடு கேலரியில் அமர்ந்து வீரர்களை கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தி ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டனர். அப்போது பேசிய நடிகர் விக்ரம், நான் முதன்முதலில் ஜல்லிக்கட்டை பார்க்கிறேன். நான் வீரதீரசூரன் அல்ல. உண்மையான வீரதீரசுரர்கள் நீங்கள்தான். காளையை அடக்கும் இந்த வீரர்கள் தான் இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்றார். இதேபோல துஷாரா விஜயன் பேசும்போது நம்மூர் திருவிழா இது. அதை காண நேரில் வந்துள்ளேன் என்று கூறினார்.

More