Thoothukudi: 442-ம் ஆண்டு திருவிழா.. பனிமய மாதா பேராலயத்தில் குவிந்த பக்தர்கள்!
- உலக புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா கூட்டுத்திருப்பலி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், உலக மக்கள் அனைவரும் இன்புற்று இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இத்திருப்பலியில் தூத்துக்குடி மட்டுமில்லாமல் தென் மாவட்டம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருவுருவ சப்பரபவனி இன்று மாலை நடைபெற உள்ளது. பேராலய திருவிழாவையொட்டி தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.