Tamil News  /  Video Gallery  /  8 Charred To Death Massive Fire In E-scooter Showroom Secunderabad

Video: தெலங்கானா இ- பைக் ஷோரும் தீ விபத்தில் 8 பேர் பலி

13 September 2022, 16:41 IST Karthikeyan S
13 September 2022, 16:41 IST

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரும் ஒன்றில் திங்கள் கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. இந்த தளங்களில் ரூபி ஹோட்டல் என்னும் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இதில் 25 முதல் 30 பேர் வரை தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென பற்றிய தீ மற்றும் கரும்புகையில் அங்கிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். தீ விபத்து குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கு தங்கி இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தெலங்கானா அரசு விராணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

More