தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tiruvannamalai : உணவு பாதுகாப்பு துறை அதிரடி.. 500 கிலோ மாம்பழம், 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல்!

Tiruvannamalai : உணவு பாதுகாப்பு துறை அதிரடி.. 500 கிலோ மாம்பழம், 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல்!

May 22, 2024 01:04 PM IST Divya Sekar
May 22, 2024 01:04 PM IST
  • மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற அதிரடி சோதனையில் தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பழ கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பழக்கடைகளில் ரசாயன பொருட்களை தெளித்தும் ரசாயன பொருட்களை சிறுசிறு கட்டிகளாக வைத்தும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். மேலும் இந்த தவறுகளை செய்த பழக்கடை உரிமையாளர்களில் மீது அபராதமும் விதிக்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More