Tamil News  /  Tamilnadu  /  Youtuber Savukku Shankar Sentenced To 6 Months In Jail
சவுக்கு சங்கருக்கு சிறைத் தண்டனை
சவுக்கு சங்கருக்கு சிறைத் தண்டனை

6 month jail for Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு சிறைத் தண்டனை!

15 September 2022, 18:36 ISTSuriyakumar Jayabalan
15 September 2022, 18:36 IST

யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் மூலம் சவுக்கு சங்கர் மிகவும் பிரபலமாகி வருகிறார். தொலைக்காட்சிகளுக்கு இவர் கொடுக்கும் பேட்டிகள் அனைத்திலும் சர்ச்சையான வாதங்களையே முன்னிறுத்துவார்.

ட்ரெண்டிங் செய்திகள்

அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று நீதித்துறை குறித்து அவதூறாகப் பேட்டி கொடுத்துள்ளார். அதில் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கி உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தொடுக்கப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கின் கீழ் யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு உத்தரவு கொடுத்தது.

டாபிக்ஸ்