Savukku Shankar: ‘வீடு தாக்குதலில் 5 பேர் கைது.. பின்னர் ஜாமினில் விடுவிப்பு’ சவுக்கு சங்கர் போட்ட ஷாக் பதிவு!
சவுக்கு சங்கர் வீட்டில் மலம் மற்றும் கழிவுகள் ஊற்றி தாக்குதல் நடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிலரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை ஏன் கைது செய்யவில்லை என சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 குற்றவாளிகள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்துள்ளனர். போலீஸ் வசமிருந்த வழக்கு, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள், செல்வா, கல்யாண், விஜய், பாரதி மற்றுமு் தேவி என்று கூறப்படுகிறது.
கைது நடவடிக்கையை விமர்சித்த சவுக்கு சங்கர்
இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் எடுத்துள்ள இந்த கைது நடவடிக்கையை ‘மக்களை ஏமாற்றும் செயல்’ என சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சவுக்கு சங்கர், ‘அன்புள்ள தமிழக காவல்துறையே, வாணி ஸ்ரீ, ஜெயக்குமார், ஒய்சி ராகவன், ராயபுரம் மணி, நுங்கை சீனிவாசன் ஆகியோர் தான் உண்மையான குற்றவாளி, அவர்கள் குற்றம் நடந்த இடத்தில் இருந்தார்கள். தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள்’ என்று பதிவுசெய்துள்ளார்.
சவுக்கு சங்கரின் எக்ஸ் தள பதிவு இதோ
துப்புரவுத் தொழிலாளர்களை இழிவாக பேசியதாகக் கூறி, பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் வீட்டில் துப்புரவுப் பணியாளர்கள் என்று கூறி திரண்டு வந்த கும்பல், மலம் உள்ளிட்ட கழிவுகளை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் சவுக்கு சங்கரின் தாய்க்கு மிரட்டில் விடுத்து, அராஜகத்தில் ஈடுபட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சவுக்கு சங்கர் தயார் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
இந்த சம்பவத்தின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் ஆகியோர் இருப்பதாக, சவுக்கு சங்கர் தரப்பில் நேரடியாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விசாரணையை, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி, காவல் துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக, செல்வப் பெருந்தகையின் ஆதரவாளராக அறியப்படும் பெண் ஒருவர், நேரடியாக தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாக, வீடியோ, போட்டோ ஆதாரங்களுடன் சவுக்கு சங்கர் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
காவல் துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவில், விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
5 பேரும் ஜாமினில் விடுவிப்பு
விசாரணை முடிந்து அவர்கள் 5 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான 5 பேரும் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
