Tamil News  /  Tamilnadu  /  Youtuber Irfan's Luxury Car Collides With An Elderly Woman Near Chennai
யூடியுபர் இர்பான் மற்றும் உயிரிழந்த மூதாட்டி பத்மாவதி
யூடியுபர் இர்பான் மற்றும் உயிரிழந்த மூதாட்டி பத்மாவதி

Youtuber irfan: யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதி மூதாட்டி பலி

26 May 2023, 18:25 ISTKathiravan V
26 May 2023, 18:25 IST

இதில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நேற்றிரவு சொகுசு கார் ஒன்று மோதி பத்மாவதி என்ற மூதாட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தம்பரம் மாநாகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இந்த சொகுசு கார்  பிரபல யூடியூபர் இர்பானுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் நடந்த போது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா என்பது குறித்தும், அசாரூதின் காரை ஓட்டி வரும் போது மதுபோதையில் இருந்தரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல யூடியூபரான இர்பான், ’இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்த வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமான இர்பானின் வீடியோக்கள் ட்ரண்டிங்கில் இடம் பெறுவது வழக்கம்.  தற்போது உணவு ரிவியூ மட்டுமின்றி திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்கள் எடுத்து இர்பான் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்