தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar Case: ’சிறையில் வேறு இடம் வேண்டும்!’ நீதிபதியிடம் கேட்ட சவுக்கு சங்கர்! காவலை நீட்டித்த நீதிபதி!

Savukku Shankar Case: ’சிறையில் வேறு இடம் வேண்டும்!’ நீதிபதியிடம் கேட்ட சவுக்கு சங்கர்! காவலை நீட்டித்த நீதிபதி!

Kathiravan V HT Tamil
May 14, 2024 05:27 PM IST

“Savukku Shankar Case: கடந்த மே 4ஆம் தேதி பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்”

’சிறையில் வேறு இடம் வேண்டும்!’ நீதிபதியிடம் கேட்ட சவுக்கு சங்கர்! காவலை நீட்டித்த நீதிபதி!
’சிறையில் வேறு இடம் வேண்டும்!’ நீதிபதியிடம் கேட்ட சவுக்கு சங்கர்! காவலை நீட்டித்த நீதிபதி!

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த மே 4ஆம் தேதி பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். 

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் சவுக்கு சங்கரை 5 நாட்களுக்கு விசாரணை செய்ய அனுமதி தர வேண்டும் என கேட்ட நிலையில் ஒருநாள் விசாரணைக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

இன்று மாலை உடன் ஒருநாள் காவல் முடிந்த நிலையில் சவுக்கு சங்கரை கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவருக்கு வரும் மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கோவை சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறையில் உள்ளதாகவும், கை முறிவு ஏற்பட்டு உள்ளதால் தனியாக இருக்க முடியாது, வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என கேட்டு இருந்தார். 

சவுக்கு சங்கரின் கோரிக்கையை கேட்ட நீதிபதி, இதனை மனுவாக கொடுத்தால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் பரிசீலிக்க சொல்வதாக கூறினார்.

சவுக்கு சங்கர் கைதின் பின்னணி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கடந்த மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், சவுக்கு சங்கர். வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலர்கள் சவுக்கு சங்கரை தாக்கியதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அளித்தார். அப்போது, "சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பும் சிறையில் அடைப்பதற்கு முன்பும் என இரண்டு முறை முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது உடலில் எந்தவித பாதிப்பும் இல்லை. கை கால் நன்றாக இருந்தது. சிசிடிவி காட்சியிலும் இது தெரியும்.

தற்போது அவரது கைகள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடலில் தடிப்பு தடிப்பாக ரத்தக் கட்டுகள் ஏற்பட்டுள்ளன.

சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார் என தெரிவித்தார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்