தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Youth Hurls Tomato At Odisha 5t Chairman Vk Pandian

VK Pandian: ’ஒடிசாவில் தமிழரான வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசித் தாக்குதல்!’

Kathiravan V HT Tamil
Feb 22, 2024 04:37 PM IST

”VK Pandian: வி.கே.பாண்டியன் மேடையில் பேசுகையில், "முட்டை, தக்காளி மற்றும் மையால் தாக்கப்பட்டாலும் ஒடிசா மக்களுக்கு சேவை செய்வேன்" என்று கூறினார்”

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த வி.கே.பாண்டியன் அம்மாநில முதலமைச்சரும் பிஜு ஜனதாதளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். 

அவரது தனிச்செயலாளராக இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிஜு ஜனதாதளம் கட்சியில் வி.கே.பாண்டியன் இணைந்தார். 

தற்போது ஒடிசா அரசின் 5டி என்ற அரசு திட்டத்தின் தலைவராக வி.கே.பாண்டியன் இருந்து வருகிறார். 

ஒடிசாவின், கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெல்லகுந்தா பகுதியில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வி.கே.பாண்டியன் மீது இளைஞர் ஒருவர் தக்காளியை வீசினார்.

பாண்டியன் மீது தக்காளியை வீசிய இளைஞர் காங்கிரஸ் தொண்டர் என்றும் பெல்லகுந்தா தொகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 

இச்சம்பவத்தையடுத்து, போலீசாரும், பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்களும், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தது தாக்கியதாக கூறப்படுகிறது.  

‘அமா ஒடிசா நபி ஒடிசா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள காலை 11.30 மணியளவில் பாண்டியன் மேடைக்கு வந்தபோது இளைஞர் தக்காளியை வீசிய தெரிய வந்துள்ளது. 

இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்குப் பிறகும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வி.கே.பாண்டியன் மேடையில் பேசுகையில், "முட்டை, தக்காளி மற்றும் மையால் தாக்கப்பட்டாலும் ஒடிசா மக்களுக்கு சேவை செய்வேன்" என்று கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்