Tamil News  /  Tamilnadu  /  Young Woman Mysteriously Died Near Thanjavur

Crime: காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு..ஆணவக் கொலையா? - போலீஸ் விசாரணை

Karthikeyan S HT Tamil
Jan 08, 2024 05:00 PM IST

காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காதல் திருமணம் (கோப்புபடம்)
காதல் திருமணம் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சோ்ந்த ஐஸ்வர்யா (19) இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் படிப்பை முடித்த இருவரும், திருப்பூரில் ஒன்றாக பணியாற்றிய நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் வாட்ஸ்அப் குரூப்பில் பரவியதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனிடையே, பல்லடம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஐஸ்வர்யாவின் உறவினர்கள் போலீஸ் தரப்பில் பேசி, ஐஸ்வர்யாவை மட்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற நிலையில், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யா இறந்துள்ளார். மர்மான முறையில் உயிரிழந்த ஐஸ்வர்யாவின் உடலை, உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுக்காமல் எரித்துள்ளனர். இந்த விஷயம் தற்போது தெரியவர கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் பூவாலூர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்