காதல் விவகாரம்..இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை.. காதலனுக்கு நேர்ந்த கதி என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  காதல் விவகாரம்..இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை.. காதலனுக்கு நேர்ந்த கதி என்ன?

காதல் விவகாரம்..இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை.. காதலனுக்கு நேர்ந்த கதி என்ன?

Karthikeyan S HT Tamil
Sep 01, 2023 05:38 PM IST

Tiruppur Crime: திருப்பூரில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை (சித்தரிப்புபடம்)
கொலை (சித்தரிப்புபடம்)

இந்த நிலையில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் இன்று பணியில் இருந்துள்ளார். அப்போது மருத்துவமனைக்கு வந்த நரேந்திரன், சத்தியஸ்ரீயிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாஸ்ரீயின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், கழுத்தில் பலத்த காயமடைந்த சத்யஸ்ரீக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் பின்னர் நரேந்திரனும் தன்னை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் நரேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நரேந்தினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பட்டப்பகலில் இளம் பெண் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.