NTK vs DMK: பெரியார் இல்லை என்றால் முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டி இருப்பேன்! அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ntk Vs Dmk: பெரியார் இல்லை என்றால் முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டி இருப்பேன்! அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

NTK vs DMK: பெரியார் இல்லை என்றால் முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டி இருப்பேன்! அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

Kathiravan V HT Tamil
Jan 24, 2025 12:13 PM IST

NTK vs DMK: இந்தியாவிலேயே தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் அவர்கள். ஆனால் அந்த தந்தை பெரியாரை கூட எதிர்த்து பேசும் அளவுக்கு இழிநிலை பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள் என சீமான் பெயரை குறிப்பிடமால் துரைமுருகன் விமர்சனம்.

NTK vs DMK: பெரியார் இல்லை என்றால் முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டி இருப்பேன்! அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!
NTK vs DMK: பெரியார் இல்லை என்றால் முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டி இருப்பேன்! அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணையும் விழா!

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த 52 நிர்வாகிகள் உட்பட 3000 பேர் திமுகவில் இணையும் விழா திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

துரைமுருகன் பேச்சு!

இந்த நிகழ்ச்சியில் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் பேசினார். அதில், பலர் திமுகவுக்கு வந்து இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் வரும் வழியில் உங்கள் கவனத்தை திசைத் திருப்ப பலர் முயற்சி செய்து இருப்பார்கள், நீங்கள் அந்த திசையை நோக்கி போய் இருப்பீர்கள். ஆனால் போன பின்னர்தான் தெரிகிறது. அவர்கள் தலைவர்கல் அல்ல; தரம் தாழ்ந்த பிம்பங்கள் என்று. நாம் இந்தியை எதிர்ப்போம், சிலர் இந்தியை ஆதரிப்பார்கள். நாங்கள் மாநில சுயாட்சி கேட்டால், சிலர் எதிர்பார்கள். இதையெல்லாம் அரசியல் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால். நான் எங்கே துரைமுருகன், எம்.ஏ., பிஎல்., சட்டமன்ற உறுப்பினர், திமுக பொருளாளர் உள்ளிட்ட அந்தஸ்துகளை பல ஆண்டுகளாக பெற்று உள்ளேன் என்றால் அதற்கு ஒரே காரணம் தந்தை பெரியார்தான்.

கோவணம் கட்டி ஏர் ஓட்டி இருப்பேன்!

தந்தை பெரியார் அவர்கள் இல்லாவிட்டால், இன்னும் நான் முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டிக் கொண்டு இருந்து இருப்பேன். நம்மை பற்றி நமக்கு புரிய வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்காக அவர் பட்ட அவமானங்கங்களும், தாக்குதல்களும் அதிகம். அதை பற்றி எனக்கு கவலையில்லை. தமிழ்ச் சமுதாயம் இந்தியாவிலேயே தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் அவர்கள். ஆனால் அந்த தந்தை பெரியாரை கூட எதிர்த்து பேசும் அளவுக்கு இழிநிலை பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.