Ayudha pooja 2022 : ஆயுத பூஜை அன்று நாம் செய்ய வேண்டியவை என்ன?
ஆயுத பூஜை ஏன் கொண்டாட படுகிறது, அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சென்னை : தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆயுத பூஜை.
ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த விழாவானது, நவராத்திரியின் 9 ஆவது நாள் கொண்டாடப்படும். அன்றைய தினம், மகா நவமி.
ஆயுத பூஜையைக்கான காரணம்
ஆயுத பூஜை என்பது அரக்க ராஜாவை, தேவி துர்கா வீழ்த்தியதன் வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது.தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாகவும் நம்பப்படுகிறது. அந்த நாளை தான் ஆயுத பூஜையாக கொண்டாட தொடங்கினர்.
ஆயுத பூஜையானது கைவினைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஒவ்வொரு கருவிகளும் அந்தந்த தொழிலில் வெற்றியை அடைய உதவுகின்றன என்று நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும், வெகுமதி பெறுவதற்கும், வழிபாடு நடத்தப்படுகிறது.
சமீபத்திய காலங்களில், மக்கள் தங்கள் வாகனங்களையும் வணங்க தொடங்கிவிட்டனர். எனவே, இது வாகன பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா வகையான தீமைகளிலிருந்தும் விடுபட மக்கள் இந்த நாளில் தங்களது ஆட்டோக்கள், கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சுத்தப்படுத்தி வழிபாடு நடத்துகிறார்கள்.
ஆயுத பூஜையை எப்படி கொண்டாடுவது
ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம்.
இந்த ஆயுத பூஜை நாளில் வீட்டை சுத்தம் செய்து பூஜை வேலைகளையெல்லாம் முடித்து நெய்வேத்தியங்கள் செய்து அன்று நீங்கள் உழைப்புக்காக,வருமானத்திற்காக,பயன்படுத்தும் எந்த பொருளாக இருந்தாலும் சரி அதற்கு மஞ்சள், குங்குமம்,பூ வைத்து மரியாதை செய்து, குழந்தைகளின் கல்வி ஞானத்தை தரக்கூடிய படிக்கும் புத்தகங்களுக்கும் மஞ்சள் குங்குமம் விட்டு பூஜை அறையில் வைத்து வணங்கி மரியாதை செலுத்துவார்கள்.
மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களில் திலகமிடுவது அவசியம். அவல், பொரி, சுண்டல், பழம் உள்ளிட்டவைகளை சாமிக்கு படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்படும். துர்க்கை அன்னை முன் எல்லாவற்றையும் படைத்து பின்னர் பஜனைகள் பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
டாபிக்ஸ்