அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குவாதம் செய்தாரா ?.. நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குவாதம் செய்தாரா ?.. நடந்தது என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குவாதம் செய்தாரா ?.. நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Published Jun 25, 2025 01:35 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான 2ஆவது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குவாதம் செய்தாரா ?.. நடந்தது என்ன?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குவாதம் செய்தாரா ?.. நடந்தது என்ன?

குறிப்பாக கரூர், அரவக்குறிச்சி தொகுதி குறித்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த விளக்கத்தை பொதுச்செயலாளர் ஏற்றுக்கொள்ளாமல் விஜயபாஸ்கரை கடிந்து கொண்டதாகவும், வாக்குவாதம் நடந்ததாகவும் கற்பனைச் செய்தியை பரப்பிவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், உண்மை என்னவென்றால் பொதுச்செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மிகவும் உற்சாகமாக நடந்துவருகிறது. நிர்வாகிகள் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

அதிமுக உட்கட்சி பூசல் நிகழும், சின்னம் முடக்கப்படும், கூட்டணி உடைந்துபோகும் என்றெல்லாம் எதிர்பார்த்த திமுகவினர் ஏமாந்துவிட்டார்கள். எனவே, கட்சியில் குழப்பத்தை உருவாக்குவதற்காக நடக்காத செய்திகளுக்கு எல்லாம் கண், காது, மூக்கு வைத்து கற்பனை செய்தியை பரப்பி வருகிறார்கள். அவர்களது பொய்யும் பித்தலாட்டமும் மக்களிடம் எடுபடாது.

திமுக கூட்டணியில் தான் நிறைய குழப்பங்கள் நிலவுகிறது. அதிக சீட் கேட்ட காரணத்தால் மதிமுகவை உடைக்கும் வேலையை திமுக செய்துவருகிறது. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை திமுகவில் சேர்த்து எச்சரிக்கை செய்கிறது. முழுமையாக வசதிகள் செய்து தரப்பாடாமல் மருத்துவமனையைத் திறந்து வைக்கிறது. போதை வழக்கில் திமுகவின் முக்கியப் புள்ளிகளை நோக்கி விசாரணை செல்கிறது. தமிழகத்தில் தினமும் கொலை, வன்முறை சகஜமாகியிருக்கிறது. இன்று காலையில் கூட திருப்பூரில் ரத்த வெறியாட்டம் நடந்துள்ளது.

இதுபோன்ற விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு நடக்காத ஒன்றை நடந்தது போன்று திமுகவினர் செய்தி பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பொய், பித்தலாட்டச் செய்தி பரப்புபவர்கள் விரைவில் கண்டறியப்படுவார்கள். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரப்படும்." என்றார்.