Weather Update: மக்களே அலார்ட்.. இன்று எல்லாப்பகுதிகளிலும் மழை.. 10 மணி வரை எங்கெல்லாம் மழை கொட்டும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: மக்களே அலார்ட்.. இன்று எல்லாப்பகுதிகளிலும் மழை.. 10 மணி வரை எங்கெல்லாம் மழை கொட்டும் பாருங்க!

Weather Update: மக்களே அலார்ட்.. இன்று எல்லாப்பகுதிகளிலும் மழை.. 10 மணி வரை எங்கெல்லாம் மழை கொட்டும் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Published May 22, 2024 07:33 AM IST

Weather Update: இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பின்னர் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தெற்கு வங்காளத்தில் மழை தொடரும். தெற்கு வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள், கிழக்கு மிட்னாபூர், ஹவுரா, கொல்கத்தா, ஹூக்ளி, புருலியா, ஜார்கிராம், மேற்கு மிட்னாபூர், பாங்குரா, மேற்கு பர்த்வான், கிழக்கு பர்த்வான், பிர்பும், முர்ஷிதாபாத் மற்றும் நாடியா) இந்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அன்றைய தினம் தெற்கு வங்காள மாவட்டங்களில் புயல் வீசக்கூடும். (படம்: AFP)
பின்னர் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தெற்கு வங்காளத்தில் மழை தொடரும். தெற்கு வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள், கிழக்கு மிட்னாபூர், ஹவுரா, கொல்கத்தா, ஹூக்ளி, புருலியா, ஜார்கிராம், மேற்கு மிட்னாபூர், பாங்குரா, மேற்கு பர்த்வான், கிழக்கு பர்த்வான், பிர்பும், முர்ஷிதாபாத் மற்றும் நாடியா) இந்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அன்றைய தினம் தெற்கு வங்காள மாவட்டங்களில் புயல் வீசக்கூடும். (படம்: AFP)

அக்னி நட்சத்திரம் தொடங்கிய சில நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்முன்கூட்டியே  தெரிவித்துள்ளது.

இன்று 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

22.05.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் இன்று காலை 10 மணிவரை செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

" 23.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சுன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25.05.2024 முதல் 27.05.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

21.05.2024 முதல் 25.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

21.05.2024; அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2° முதல் 3° செல்சியஸ் வரை இயல்பை விட குறையக்கூடும்.

22.05.2024 & 23.05.2024: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஓட்டி இருக்கக்கூடும்.

24.05.2024 & 25.05.2024:அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்' பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். "  என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.