Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!
Weather Update: இன்று முதல் 22ம் தேதி வரை, தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் ஆகியவற்றில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். - முழு லிஸ்ட் உள்ளே!
Weather Update: சென்னை வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருக்கிறது. ஆகையால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், வருகிற 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக, அதன் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இங்கே!
கடந்த 24 மணி நேரத்தில், தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்து இருக்கிறது.
அதிகபட்சமாக குன்னுார், பில்லுார் அணை, மேட்டுப்பாளையம் பகுதியில் தலா 17 செ.மீ., மழையும், அதற்கு அடுத்தபடியாக, உசிலம்பட்டி, தேனி மஞ்சளாறு பகுதிகளில், 9 செ.மீட்டர் மழையும், சிவகிரி, கீழ்கோத்தகிரி எஸ்டேட், பர்லியார், திருப்பூர் மடத்துக்குளம் பகுதிகளில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகி இருக்கிறது.