தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
May 17, 2024 02:41 PM IST

”Weather Update: தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் ரெட் அலார்ட் மற்றும் 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது”

‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

17.05.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் திருப்பூர், திண்டுக்கல், தேனி விருதுநகர், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

18.05.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19.05.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

20.05.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி தேனி, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர். திண்டுக்கல், மதுரை, விருதுநகர் சிவகங்கை தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் அரியலூர் கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

21.05.2024. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

22.05.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:-

17.05.2024 முதல் 21.05.2024வரை அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

17.05.2024, குமரிக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.05.2024 குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் கேரள கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.05.2024 21.05 2024: குமரிக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் கேரள கர்நாடக கடலோரப்பகுதிகள் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்