தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: ’மக்களே உஷார்! தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Weather Update: ’மக்களே உஷார்! தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
May 11, 2024 02:38 PM IST

”நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது”

’மக்களே உஷார்! தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
’மக்களே உஷார்! தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ட்ரெண்டிங் செய்திகள்

12.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

13.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு,,திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.05.2024 மற்றும் 17.05,2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

11.05.2024 முதல் 15.05.2024 வரை; அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும் வெப்பம் இருக்கும். 

பிற்பகலில் 45-55% ஆகவும், மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60-85% ஆகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்:-

தண்ணீர்

  • தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
  • தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.
  • உணவு
  • லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.
  • தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
  • வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

ஆடை

  • வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
  • தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
  • வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.
  • சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
  • தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
  • வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்