Weather Update: ’கோடை வெப்பத்திற்கு டாட்டா!’ தென் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: ’கோடை வெப்பத்திற்கு டாட்டா!’ தென் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Weather Update: ’கோடை வெப்பத்திற்கு டாட்டா!’ தென் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Apr 21, 2024 01:58 PM IST

”30.03.2024 முதல் 01.04.2024 வரை; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்”

மழை (கோப்புபடம்)
மழை (கோப்புபடம்)

கடந்த 24 மணி நேர வானிலை

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 19 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் மலைப்பகுதியான கொடைக்கானலில் 10.7 டிகிரி செல்ஷிஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

இன்று காலை 8.30 மணி உடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் 2 செமீ மழையும், குளச்சல் பகுதியில் ஒரு செமீ மழையும் பதிவாகி உள்ளது. 

இன்றைய வானிலை நிலவரம்

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

30.03.2024 முதல் 01.04.2024 வரை; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

02.04.2024 மற்றும் 03.04.2024: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

04.04.2024 மற்றும் 05.04.2024; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:-

30.03.2024 முதல் 03.04.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து இனங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-

ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-

தண்ணீர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.

தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.

உணவு

லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.

தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.

வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

ஆடை

வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.

தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.

வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.

சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.

தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.