Weather Update: வெளுத்து வாங்கப்போகும் வெயில்.. அதிகபட்ச வெயில் எங்கே அடிக்கும் தெரியுமா? இன்றைய வானிலை நிலவரம்!
இன்றைய நாளை பொருத்தவரை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியல் வரை வெப்பமும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் வீச வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 20 முதல் 22ம் தேதி வரை சில பகுதிகளில் கோடை மழை பெய்தது; அதன் பின்னர் மீண்டும் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
நேற்று மாலை நேர நிலவரப்படி, அதிகபட்சமாக சேலத்தில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீசி இருக்கிறது. அதே போல ஈரோட்டில் 38.4 டிகிரி செல்சியல் வெப்பமும் , தர்மபுரியில் 38 டிகிரி செல்சியல் வெப்பமும் , வேலூரில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பமும் , மதுரையில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் , கரூரில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பமும் வீசி இருப்பதாக சென்னை வாயிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை எங்கேயும் மழை பெய்யவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
இன்றைய நாளை பொருத்தவரை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியல் வரை வெப்பமும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் வீச வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.
நாளை நிலவரத்தை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், புதன்,வியாழன் மற்றும் வெள்ளி நிலவரத்தை பொருத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சனிக்கிழமை நிலவரத்தை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னையை பொருத்தவரை இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-
தண்ணீர்
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.
உணவு
லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.
தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
ஆடை
வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.
சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்