Tamil News  /  Tamilnadu  /  Weather Update For Next Two Days In Tamilnadu

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வருமா? - அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

Karthikeyan S HT Tamil
Jan 16, 2024 02:05 PM IST

Weather Update: நீலகிரியில் இரண்டு நாட்களுக்கு உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அப்டேட்
வானிலை அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (ஜன.16) நாளையும் (ஜன.17) வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் இன்றும் நாளையும் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 21 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்