Weather Update: ’இயல்பை விட அதிகரிக்க போகும் வெப்பம்! எங்கெங்கு தெரியுமா?’ இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: ’இயல்பை விட அதிகரிக்க போகும் வெப்பம்! எங்கெங்கு தெரியுமா?’ இதோ முழு விவரம்!

Weather Update: ’இயல்பை விட அதிகரிக்க போகும் வெப்பம்! எங்கெங்கு தெரியுமா?’ இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Apr 14, 2024 02:16 PM IST

”15.04.2024 முதல் 17.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்”

வெப்பம்
வெப்பம்

2. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

14.04.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மற்றும்

15.04.2024 முதல் 17.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

18.04.2024: மேற்கு தொடர்ச்சி தலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

19.04.2024 மற்றும் 20.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து இனங்களுைக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:-

14.04.2024 முதல் 18.04.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° - 3° செல்சியஸ் உயரக்கூடும்.

14.04.2024 மற்றும் 15.04.2024: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37-40° செல்சியஸ். வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34-38° செல்சியஸ் இருக்கக்கூடும். 

16.04.2024 முதல் 18.04.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் இடங்களில் 38°-41° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:-

14.04.2024  முதல் 18.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

14.04.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-

தண்ணீர்

  • தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
  • தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.
  • உணவு
  • லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.
  • தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
  • வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
  • ஆடை
  • வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
  • தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
  • வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.
  • சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
  • தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
  • வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.