தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Weather Forecast And Warning For Next 6 Days

Weather Update : மக்களே உஷார்.. அடுத்த ஆறு நாட்களுக்கு இங்கு எல்லாம் வெயில் கொளுத்துமாம்.. எச்சரிக்கையாக இருங்கள்!

Divya Sekar HT Tamil
Apr 03, 2024 06:38 AM IST

Weather Update : தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெயில் (கோப்புபடம்)
வெயில் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

அதிகபட்ச வெப்பநிலை :

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பாகவும், ஒருசில இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. புதுவையில் இயல்பை விட சற்று அதிகமாகவும், காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது.

உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 37° – 40° செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 33° – 36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23° – 29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 40.4° செல்சியஸ் , கரூர் பரமத்தியில் 40.2° செல்சியஸ், சேலம் மற்றும் திருச்சியில் 39.3° செல்சியஸ், மதுரை நகரம் 39.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

நாமக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸ் முதல் 39° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பாக இருந்தது. (மீனம்பாக்கம் : 35.7° செல்சியஸ் & நுங்கம்பாக்கம் : 35.0° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த 6 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

03.04.2024: தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

04.04.2024 முதல் 07.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

இன்று முதல் 06.04.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 39° – 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம் 

அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்