தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  We Made Electricity Board As Revenue Generating Sector, Says Minister Senthil Balaji

கூடுதல் வருவாய் வரும் துறையாக மின்வாரியத்தை மாற்றியுள்ளோம் - செந்தில் பாலாஜி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 15, 2022 06:22 PM IST

Senthil balaji press meet: மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மின்சார எண் ஆதார் எண் இணைப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மின்சார எண் ஆதார் எண் இணைப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் 51 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 52 லட்சம் பேர் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமும் மின் இணைப்பு என்னுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்த மாதம் 31ஆம் தேதி வரை மின் இணைப்புதாரர்கள் தங்களது என்னுடன் ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களில் வைத்தோ அல்லது அந்தந்த மின் கோட்ட வாரிய அலுவலகங்களில் வைத்தோ தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய நாளில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்த பணியானது நடைபெறாது.

சென்னையில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

மின் வாரிய ஊழியர்களுடன் மின்வாரிய நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஊழியர்களின் எண்ணப்படி மின் வாரியத்தை செயல்படுத்த முடியாது. இருப்பினும் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த மின் வாரிய நிர்வாகம் தயாராக உள்ளது.

கடந்த ஆட்சியை காட்டிலும் தற்போது கூடுதல் வருவாய் வரக்கூடிய துறையாக மின் வாரியத்தை மாற்றியுள்ளோம். ரூ. 13 கோடியே 71 லட்சம் வரை வருவாய் அதிகரித்து உள்ளது.

மின்வாரியம் வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் ரூ. 84 கோடி வரை செலவு மிச்சமாக்கப்பட்டுள்ளது. மின்சார துறையை பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. 7 டிவிஷனில் புதைவட கம்பிகள் பதிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது".

இவ்வாறு அவர் கூறினார்.

IPL_Entry_Point