’அண்ணா மண், தம்பி மண் அல்ல...! எல்லா மண்ணிலும் தடுப்பணை கட்டித் தருகிறேன்’ அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அண்ணா மண், தம்பி மண் அல்ல...! எல்லா மண்ணிலும் தடுப்பணை கட்டித் தருகிறேன்’ அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!

’அண்ணா மண், தம்பி மண் அல்ல...! எல்லா மண்ணிலும் தடுப்பணை கட்டித் தருகிறேன்’ அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Dec 10, 2024 01:11 PM IST

காஞ்சிபுரத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. பாலாற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் மண்ணின் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு என எழிலரசன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்

’அண்ணா மண்,  தம்பி மண் அல்ல...! எல்லா மண்ணிலும் தடுப்பணை கட்டித் தருகிறேன்’ அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!
’அண்ணா மண், தம்பி மண் அல்ல...! எல்லா மண்ணிலும் தடுப்பணை கட்டித் தருகிறேன்’ அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேர விவாதத்தின் போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன் பேசுகையில், நீர்வளத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் இருந்து வரும் பாலாறு, காஞ்சிபுரத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. பாலாற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் மண்ணின் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. எனவே விஷார் கிராமத்தின் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்ட முன் வருவாரா என்று அறிய விரும்புகிறேன் என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எல்லா உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக நீர்வளத்தை பெருக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்பதுதான். அதனை நான் முழுக்க ஏற்றுக் கொள்கிறேன். நானே அதை பரிட்சார்த்தமாக பார்த்து இருக்கிறேன். எனவே இந்த ஆண்டு முதலமைச்சரிடம் இதை எடுத்து கூறி ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவதற்கு உரிய அனுமதியை பெற முயற்சிப்பேன். அண்ணா மண்; தம்பி மண் என்பது அல்ல, எல்லா மண்ணுக்கும் கட்டப்படும் என தெரிவித்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.