வக்ஃபு சொத்து: வேலூர் அருகே வக்ஃபு சொத்து எனக் கூறி 150 குடும்பங்களுக்கு நோட்டீஸ்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்!
வேலூர் அருகே 150 இந்து குடும்பங்கள் நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் விவசாய நிலங்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், அப்பகுதி விரிஞ்சிபுரம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறி பொது மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் இறைவங்காடு அருகே உள்ள காட்டுக் கொள்ளை கிராமத்தில் உள்ள நிலங்கள், வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்து எனக்கூறி 150 இந்துக் குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் வக்ஃபு வாரிய சொத்து எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காட்டுக் கொள்ளை கிராமத்தில் 150 இந்து குடும்பங்கள் நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் விவசாய நிலங்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், அப்பகுதி விரிஞ்சிபுரம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறி பொது மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நவாப் மசூதி மற்றும் சையத் அலி சுல்தான் ஷா தர்காவை சார்ந்த சையத் சதாம் என்பவர் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நோட்டீஸில் உள்ளது என்ன?
காட்டுக் கொள்ளை கிராமத்தில் உள்ள நிலஙகள் அனைத்தும் அங்குள்ள தர்காவிற்கு சொந்தமானது. இதனால் இந்த நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் அல்லது அந்த நிலத்துக்கான வரியை தர்காவிடம் செலுத்தி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டில் இருந்து ஆவணங்கள் இருப்பதாக தர்கா நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கெனவே முறையாக வரி செலுத்தும் நிலையில், இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் முறையிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
பாராளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025-ன் அரசியல் சட்டப்பூர்வமான செல்லுபடியை எதிர்த்து, காங்கிரஸ், திமுக, தமிழக வெற்றிக் கழகம், தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்