TVK Protest: வக்ஃபு சட்டத்தால என்ன பாதிப்பு! ஒரு பாயிண்டு சொல்லுங்க!’ புஸ்ஸி ஆனந்தை மடக்கிய ரிப்போட்டர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tvk Protest: வக்ஃபு சட்டத்தால என்ன பாதிப்பு! ஒரு பாயிண்டு சொல்லுங்க!’ புஸ்ஸி ஆனந்தை மடக்கிய ரிப்போட்டர்!

TVK Protest: வக்ஃபு சட்டத்தால என்ன பாதிப்பு! ஒரு பாயிண்டு சொல்லுங்க!’ புஸ்ஸி ஆனந்தை மடக்கிய ரிப்போட்டர்!

Kathiravan V HT Tamil
Published Apr 04, 2025 01:41 PM IST

செய்தியாளர் ஒருவர், "வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவில் எந்த ஷரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது என்று நீங்கள் சொல்லுங்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

TVK Protest: வக்ஃபு சட்டத்தால என்ன பாதிப்பு! ஒரு பாயிண்டு சொல்லுங்க!’ புஸ்ஸி ஆனந்தை மடக்கிய ரிப்போட்டர்!
TVK Protest: வக்ஃபு சட்டத்தால என்ன பாதிப்பு! ஒரு பாயிண்டு சொல்லுங்க!’ புஸ்ஸி ஆனந்தை மடக்கிய ரிப்போட்டர்!

வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னை பனையூரில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பாக நடைபெற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் ஈ.சி.ஆர்.சரவணன் மற்றும் ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

புஸ்ஸி என்.ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு:-

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் "இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார். "இந்த சட்டத்தில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இஸ்லாமியர்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் நன்றாகவே நமக்கு தெரிய வருகிறது," என்று குறிப்பிட்டார்.

தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாட்டை வலியுறுத்திய ஆனந்த், "இஸ்லாமியர்களுக்கு எப்போதும் தமிழக வெற்றிக் கழகமும் தலைவர் அவர்களும் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் தலைவர் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் முழு விவரம் இருக்கிறது," என்று தெரிவித்தார்.

 

ஒரு ஷரத்து சொல்லுங்க!

இதனிடையே, செய்தியாளர் ஒருவர், "வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவில் எந்த ஷரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது என்று நீங்கள் சொல்லுங்கள்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆனந்த், "இஸ்லாமியர்கள் அதுல பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அந்த சட்ட திட்டங்கள் எல்லாம் என்ன என்பது தெரியும். எதற்கு தேவையில்லாமல் அவங்களுடைய சொத்துல; உங்க வீட்டு சொத்து இருக்குது, அதுல இன்னொருத்தவங்க போய் அந்த சொத்துல பங்கு கொள்றோம்; இல்ல, அதுல நாங்க வந்து இருக்கலாம்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்?" என்று ஆவேசமாக பதிலளித்தார்.

கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும்

இந்த சட்டத்தை எதிர்க்க நியாமான காரணத்தை சொல்லுங்கள் என பாஜகவினர் கூறுகின்றார்களே? என்ற கேள்விக்கு, "மக்கள் தேர்ந்தெடுத்த அரசு, மக்கள் எந்த விருப்பத்தை சொல்கிறார்களோ அதுபடி தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களை பாதிக்கும் விதமான இந்த சட்டத்தை ஒன்றிய அரசு கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும்," என்று வலியுறுத்தினார்.