தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  வாக்களிப்பு ஒருவரின் தேர்வு, அதை கட்டாயமாக்க முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம்

வாக்களிப்பு ஒருவரின் தேர்வு, அதை கட்டாயமாக்க முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம்

Priyadarshini R HT Tamil
Mar 18, 2023 06:55 AM IST

Voting is a Choice : வாக்களிப்பது தேர்வு மட்டுமே. அதை கட்டாயமாக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருவர் விரும்பினால் வாக்களிக்கலாம், இல்லாவிட்டால் வாக்களிக்கச் செல்லாமல் இருக்கலாம். கட்டாயமாகச் செல்ல வேண்டும் என்று நாம் கூற முடியாது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கெல்லாம் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் தற்போது வரத்துவங்கியுள்ளனர். 

வாக்களிப்பது ஒருவரின் உரிமை மற்றும் தேர்வு, நீதிமன்றங்கள் மக்களை வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. பாஜக தலைவர் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயின், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கவேண்டும் என்று மனு விசாரணையின்போது நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தார்கள். 

வாக்களிப்பது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை. அவர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பது முற்றிலும் அவர்களின் தேர்வு. சென்னையில் பணியில் இருக்கும் ஒருவர், அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு ஸ்ரீநகரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும் என்று கூறுகிறீர்களா? போலீசார் அவரை பிடித்து  நகரில் வாக்களிக்க வைக்க வேண்டும். பின்னர் அவர் பின்னர் சென்னைக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் சுப்ரமோனியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு உபாத்யாயை கண்டித்தது. 

“நாம் சட்டத்தை உருவாக்கியவர்கள் அல்ல. எனவே இதுபோல் நாம் கூறமுடியாது நீதிபதிகள் அமர்வு கூறியது. மத்திய அரசும், தேர்தல் ஆணையமும், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என மனு கோரியிருந்தது. 

“வாக்களிப்பதை கட்டாயமாக்குவதற்கு சட்டத்தில் ஏதேனும் வழி இருக்கிறதா? என்றும் நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மனுதாரரை இந்த வழக்கில் கண்டிக்கவும் செய்தது. 

மனுதாரரை பிரதிநிதிபோல் தேர்தல் ஆணையம் பாவிப்பதையும் டெல்லி உயர்நுதிமன்றம் மறுத்தது. சில வாக்குவாதங்களுக்குப்பின்னர் மனுதாரர் மனுவை திரும்பபெற்றார். 

அந்த மனுவில் உபாத்யாய், கட்டாயமாக வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும், மேலும் குடியாட்சியின் தரத்தை உயர்த்தும், வாக்குரிமையை பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார். குறைந்தளவிலான வாக்காளர்கள் வாக்களிப்பது எப்போது ஒரு பிரச்னையாகவே உள்ளது. எனவே கட்டாய வாக்களிப்பு வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் குறிப்பாக விளிம்பு நிலை மக்களுள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கட்டாய வாக்களிப்பு அரசியல் பங்களிப்பை அதிகரிக்கும். அதிகளவில் வாக்களிக்கும்போது மக்களுக்கு அரசியலிலும் ஆர்வம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிக எண்ணிகையிலான மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் அரசு சட்டப்படி நடப்பதை அதிகரிக்கும். 

மாறாக தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. சட்ட ஆணையத்திற்கு கட்டாய வாக்களிப்பு குறித்த அறிக்கையை தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுள்ளது.    

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்