தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Villupuram Principal Sessions Court Upheld The 3-year Jail Sentence Of Former Special Dgp Rajesh Das

TN Police: ’பாலியல் புகார்!’ முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை உறுதி!

Kathiravan V HT Tamil
Feb 12, 2024 12:31 PM IST

குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பியான கண்ணன் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்
முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சரின் பணிக்கான சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யய்தது.  இந்த வழக்கில் பல்வேறு தரப்பு விசாரணைக்கு பிறகு, கடந்த ஜூன் 16ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதமும், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸின் இந்த நடவடிக்கைக்கு துணையாக இருந்த புகாரில் செங்கல்பட்டு எஸ்.பியாக இருந்த கண்ணனுக்கு 500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பியான கண்ணன் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். 

இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கினை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை கடந்த ஜூன் 9ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது. இதன்படி குற்றவியல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜே தாஸின் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த 3 ஆண்டு சிறை, 20 ஆயிரம் அபராதத்தை நீதிபதி உறுதி செய்தார். அதே போல் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கும் 500 ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்தது.  

மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்புக்கு 30 நாட்கள் அவகாசத்தையும் நீதிமன்றம் அளித்துள்ளது. 

WhatsApp channel

டாபிக்ஸ்