Southern Railway: புதிய முனையமாகும் வில்லிவாக்கம், 6 மாதத்தில் முடிவடையும் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள்
கிளாம்பக்கத்தில் ஆறு மாதத்தில் ரயில் நிலையம் அமைக்கப்படும், வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கிளாம்பாக்கம் பகுதி சென்னை நகரில் இருந்து தொலைவில் இருப்பதால், பேருந்து நிலையத்தை எளிதில் அடையும் வகையிலும், இணைப்பு ஏற்படுத்தும் வகையிலும் ரயில் நிலையம் புறநகர் ரயில் நிலையம் அமைக்க பயணிகள் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் எதிரில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் தமிழ்நாடு அரசு சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ. 20 கோடி மதிப்பில் வண்டலூர் ஊரப்பாக்கம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்த நிலையில், ஒப்பந்த புள்ள கோரப்பட்டு கட்டுமான பணிகலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிளாம்பாக்க ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவதற்கு 6 மாத காலம் வரை ஆகும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே மேலாளர் ஆர். என். சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மாநில அரசும் ரயில்வே நிர்வாகமும் இணைந்து கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இன்னும் 6 மாதங்களுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்படும் தெரிவித்துள்ளார்.
புதிய ரயில்வே முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமான பணிகள் தொடங்கும். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.