தீபாவளியா..அப்படின்னா?.. 3 தலைமுறைகளாக கொண்டாட்டத்தை தவிர்க்கும் 13 கிராமங்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தீபாவளியா..அப்படின்னா?.. 3 தலைமுறைகளாக கொண்டாட்டத்தை தவிர்க்கும் 13 கிராமங்கள்!

தீபாவளியா..அப்படின்னா?.. 3 தலைமுறைகளாக கொண்டாட்டத்தை தவிர்க்கும் 13 கிராமங்கள்!

Karthikeyan S HT Tamil
Nov 12, 2023 11:18 AM IST

Diwali 2023: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டி இருக்கும் நிலையில், 13 கிராமங்களில் தீபாவளி கொண்டாடுவதே கிடையாது என்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை

தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் முதன்மை பெறும். நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்பிய நாளாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த போது அவர் கிருஷ்ணரிடம் கோரிய வரத்தின் படி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிக்கலாம், புதுத்துணி அணியலாம் என்பதால் சிறுவர்களுக்கு இது பிடித்தமான பண்டிகை ஆகும்.

இந்தியா மட்டுமின்றி இலங்கை, மியான்மர், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 13 கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர். இதற்கு தங்களது முன்னோர்கள் தீபாவளியை கொண்டாட கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்ததே காரணம் என்கிறார்கள்.

காரைக்குடி அருகே எஸ்.மாம்பட்டி, விளாம்பட்டி, அச்சம்பட்டி, ஒப்பிலான் பட்டி உள்ளிட்ட 13 கிராம மக்கள் விவசாயப் பணிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், தங்களின் முன்னோர்கள் நிறைய கடன்களை வாங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடியதாகவும். ஆனால், கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டதால் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்து வருவதாக சொல்கிறார்கள்.

தீபாவளி செலவால் ஏற்படும் கடனை தவிர்ப்பதற்காக 1954-ல் 'இனி தீபாவளியை கொண்டாடவே கூடாத' என்று தீர்மானம் போட்டு அன்று தொடங்கி இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மட்டும் சிறப்பாக கொண்டாடுவதாக முன்னோர்கள் முடிவு செய்துள்ளனர். அதையே 3 தலைமுறைகளாக கிராம மக்களும் கடைபிடித்து வருகின்றனர். மொத்தம் 13 கிராமத்துல இருக்கும் மக்கள் இந்த முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். வெளியூரில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் கூட தீபாவளியை கொண்டாடுவது இல்லையாம். இது மூன்றாவது தலைமுறையாக தொடர்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.