Vilathikulam MLA: மாணவ, மாணவிகளிடம் கேள்வி கேட்டு ரூ.1000 பரிசு வழங்கிய எம்எல்ஏ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vilathikulam Mla: மாணவ, மாணவிகளிடம் கேள்வி கேட்டு ரூ.1000 பரிசு வழங்கிய எம்எல்ஏ!

Vilathikulam MLA: மாணவ, மாணவிகளிடம் கேள்வி கேட்டு ரூ.1000 பரிசு வழங்கிய எம்எல்ஏ!

Karthikeyan S HT Tamil
Sep 26, 2022 08:55 PM IST

தூத்துக்குடி மாவட்டம் செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்.

<p>மாணவ, மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு ரூ.1000 பரிசு வழங்கிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.</p>
<p>மாணவ, மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு ரூ.1000 பரிசு வழங்கிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.</p>

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம் செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா இன்று (செப்.26) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் பங்கேற்று பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், மாணவர்களிடம் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து கூறி, புத்தகத்தைத் தாண்டி பொது அறிவில் தங்களது திறமையை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்து கூறினார். மேலும், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்றும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.

<p>மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்.</p>
மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்.

இதற்கிடையே, சென்னையில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கு பெற்ற மாணவி திலகா தங்களது பள்ளிக்கு செஸ் போர்டு வேண்டும் என்று கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து செஸ் போர்டு வாங்குவதற்கு உடனடியாக நிதியுதவியை எம்எல்ஏ வழங்கினாா்.

அப்போது பள்ளி மாணவ, மாணவிகளிடம் பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்டு சரியான பதில் கூறிய மாணவிகளுக்கு ரூ.1000 பரிசாக வழங்கி எம்எல்ஏ மார்க்கண்டேயன் பாராட்டு தெரிவித்தாா். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, உதவி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சசிகுமார் உள்பட ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.