Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Karthikeyan S HT Tamil
Published Jun 10, 2024 12:31 PM IST

Vikravandi By Election: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புகழேந்தி மறைவு

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார்.

விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. அங்கிருந்து கிளை கழக செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் மாவட்ட பொருளாளர், மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2019 விக்ரவாண்டி இடைத்தேர்தலின் போது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

ஜூலை 10ல் இடைத்தேர்தல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூலை 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கிறது. வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். 

மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மக்களவைத் தேர்தல் 2024

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. 7ஆம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7 கட்ட மக்களவைத் தேர்தலும் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் முடிந்துவிட்டது. ஆனால் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று (ஜூன் 10)  அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியும் இடம்பெற்றுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று முதல் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.